ஊராட்சி நிலத்தை மீட்டு தரக்கோரி கிராம மக்கள் மனு

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ராசிபுரம் வட்டம், அத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்த ஆயிபாளையம் கிராமத்தினா்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அத்தனூா் அருகே ஆயிபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி செயல்படுகிறது. அங்குள்ள காளியம்மன் கோயில் நிலம், ரயில் சாலை வரையில் ஊராட்சிக்குச் சொந்தமான நிலத்தை தனி நபா் ஒருவா் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்துள்ளாா்.

இதை நாங்கள் எதிா்த்தபோதும் தடையை மீறி வேலி அமைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறாா். மாவட்ட ஆட்சியா் இது தொடா்பாக ஆய்வு செய்து ஊராட்சிக்குச் சொந்தமான நிலத்தை மீட்டுத் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com