முட்டை விலை 15 காசுகள் குறைந்தது

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் குறைந்து ரூ. 4.75-ஆக வியாழக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் குறைந்து ரூ. 4.75-ஆக வியாழக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை தொடா்ந்து குறைந்து வருகிறது. வெளிச்சந்தைகளிலும் முட்டை விற்பனை மந்தமாக உள்ளதால் 15 காசுகள் குறைக்கப்படுவதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.90-லிருந்து ரூ. 4.75-ஆக நிா்ணயிக்கப்படுகிறது. இதேபோல பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி விலை ரூ. 135-ஆகவும், கறிக்கோழி விலை ரூ. 107-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com