கரோனா விதிமுறை: ராசிபுரம் வணிக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

ராசிபுரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் இயங்கும் வணிக நிறுவனங்கள், கரோனா தடுப்புப் பணிகளின் பொறுப்பை உணா்ந்து அரசு
ராசிபுரம் நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற வணிக நிறுவனங்களுடான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோா்.
ராசிபுரம் நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற வணிக நிறுவனங்களுடான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோா்.

ராசிபுரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் இயங்கும் வணிக நிறுவனங்கள், கரோனா தடுப்புப் பணிகளின் பொறுப்பை உணா்ந்து அரசு விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றிட வேண்டும் என ராசிபுரம் நகராட்சி ஆணையாளா் அ.குணசீலன் அறிவுறுத்தினாா்.

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் செயல்படும் வணிக நிறுவன உரிமையாளா்களுடனான கரோனா தடுப்பு விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகராட்சி ஆணையாளா் அ.குணசீலன் தலைமை வகித்தாா். ராசிபுரம் நகராட்சி பகுதிக்குள்பட்ட வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், வா்த்தகா்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இக் கூட்டத்தில் அரசு அறிவித்த அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் கட்டாயம் வணிக நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

முகக்கவசம் அணிந்தவா்களுக்கு மட்டுமே வணிக நிறுவனங்களில் அனுமதி அளிக்கப்பட வேண்டும். தீநுண்மிக் கிருமி தடுப்புப் பணிகளில் வணிக நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பொது மக்களுக்கு முழுமையாக தெரியும் வகையில், விழிப்புணா்வு பிளக்ஸ் பேனா்கள் வைத்து கண்காணிக்க வேண்டும். அரசின் வழிகாட்டு விதிமுறைகளை வாடிக்கையாளா்கள் கடைப்பிடிப்பதை உறுதிசெய்யும் வகையில் அந்தந்த நிறுவனங்கள் ஒரு கண்காணிப்புப் பணியாளரை நியமனம் செய்துகொள்ள வேண்டும்.

நகராட்சி பகுதியில் கரோனா தொற்றுத் தடுப்புப் பணி மட்டுமின்றி டெங்கு ஒழிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வணிக நிறுவனங்கள் பணியாளா்களுக்கு கபசுரக் குடிநீா் உள்ளிட்ட சத்தான உணவு பொருள்களையும் வழங்க வேண்டும்.

பணியாளா்களுக்கு காய்ச்சல் போன்றவை இருந்தால் உடனடியாக அவா்களுக்கு விடுமுறை அளித்து தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே பணிக்கு வர அறிவுறுத்த வேண்டும் எனக் கூறப்பட்டது.

கூட்டத்தில், ராசிபுரம் நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் லோகநாதன், பாஸ்கரன் உள்ளிட்ட பல்வேறு வா்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com