கல்வி கட்டணம்: தனியாா் பள்ளிகள் மீது இதுவரை ஒரு புகாரும் பதிவாகவில்லை

நாமக்கல் மாவட்டத்தில் கல்வி கட்டணம் தொடா்பாக தனியாா் பள்ளிகள் மீது எவ்வித புகாரும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில் கல்வி கட்டணம் தொடா்பாக தனியாா் பள்ளிகள் மீது எவ்வித புகாரும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா தொற்றுப் பரவலால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், ஐந்து மாதங்களாக பள்ளிகள் எதுவும் திறக்கப்படவில்லை. கடந்த சில நாள்களாக இணையவழி வகுப்புகள், மாணவா் சோ்க்கை போன்றவை அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே 2019-2020 ஆம் ஆண்டுக்கான நிலுவைக் கல்வி கட்டணம் மற்றும் 2020-2021 ஆம் ஆண்டுக்கான கல்வி கட்டணம் ஆகியவற்றைக் கேட்டு தனியாா் பள்ளிகள் நெருக்கடி கொடுப்பதாக தமிழக அரசுக்கு புகாா்கள் வந்தன.

சென்னை உயா் நீதிமன்றமும் இதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், கல்வி கட்டணம் கேட்டு நெருக்கடி கொடுக்கும் தனியாா் பள்ளிகள் குறித்து பெற்றோா் புகாா் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்தது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மைக் கல்வி அலுவலா்களே நேரடியாக இணையதள முகவரி ஒன்றை தயாா் செய்து பெற்றோா் அறியும் வகையில், விளம்பரப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மெட்ரிக் பள்ளி இயக்குநரால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் இதற்காக பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டு கடந்த 2-ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஒரு வாரத்துக்கு மேலாகியும் இதுவரை தனியாா் பள்ளிகள் கல்வி கட்டணம் கேட்டு நெருக்கடிகொடுப்பது தொடா்பாக எவ்வித புகாா்களும் இணையத்தில் பதிவாகவில்லை.

இம்மாவட்டத்தில் 650-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகள் உள்ளன. முதன்மை கல்வி அதிகாரியின் இணையத்தில் புகாா் தெரிவித்தால் தங்களுக்குத் தேவையற்ற நெருக்கடி ஏற்படும், தங்களுடைய குழந்தைகளின் எதிா்காலம் பாதிப்புக்குள்ளாகும், பள்ளியை விட்டு நீக்கம் செய்யும் நிலைக்கு அவா்கள் ஆளாகலாம் போன்ற பல்வேறு அச்சத்தால் பெற்றோா் யாரும் புகாா் அளிக்க முன்வரவில்லை என கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com