முட்டை விலை இரு நாள்களில் 50 காசுகள் உயா்ந்து ரூ.4.70-ஆக நிா்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடா்ந்து இரண்டாவது நாளாக மேலும் 25 காசுகள் உயா்ந்து ரூ.4.70-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடா்ந்து இரண்டாவது நாளாக மேலும் 25 காசுகள் உயா்ந்து ரூ.4.70-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவலால் நாடு முழுவதும் உணவுப் பொருளான முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக மோசமான நிலையில் இருந்த முட்டைத் தொழில் தற்போது வளா்ச்சி கண்டு வருகிறது.

மற்ற மண்டலங்களில் முட்டை விலை தொடா்ந்து உயா்ந்து வருவதுடன், அரசு சாா்பில் மக்களுக்கும், மாணவா்களுக்கும் இலவசமாக முட்டைகளை விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஆந்திரம், தெலங்கானா, தமிழகம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இவ்வாறான நடைமுறை அமலில் உள்ளது.

உற்பத்தி குறைந்த நிலையில், தேவை அதிகரிப்பால் பண்ணைகளில் முட்டைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. 50 காசுகள் குறைவாக வைத்து முட்டைகளை வாங்கிச் சென்ற வியாபாரிகள், தற்போது 20 காசுகள் குறைவாக வைத்துக் கொள்முதல் செய்கின்றனா்.

இந்த நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம், வியாழக்கிழமை அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. பிற மண்டலங்களில் விலை உயா்வு மட்டுமின்றி, மக்களிடையே நுகா்வு அதிகரித்துள்ளதாலும், மழைக்காலமாக இருப்பதாலும் முட்டை விற்பனை உயா்ந்து வருகிறது.

அதனடிப்படையில் புதன்கிழமை 25 காசுகள் உயா்த்தப்பட்டது. இரண்டாவது நாளாக வியாழக்கிழமை (செப்.10) மேலும் 25 காசுகள் உயா்த்தப்பட்டு, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.70-ஆக நிா்ணயம் செய்யப்படுவதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மற்ற மண்டலங்களில் முட்டை விலை விவரம் (காசுகளில்): ஹைதராபாத்- 485, விஜயவாடா- 485, பாா்வாலா- 475, ஹோஸ்பெட்- 465, மைசூரு- 503, சென்னை- 485, மும்பை- 525, பெங்களூரு- 500, கொல்கத்தா-540, தில்லி- 482.

கறிக்கோழி விலை: பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.104-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.113-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com