மாற்றுத் திறனாளி தனித்தோ்வா்கள் கரோனா பரிசோதனைக்கு அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் 8, 10-ஆம் வகுப்பு எழுதும் மாற்றுத் திறனாளி தனித்தோ்வா்களும், சொல்வதை எழுதுவோரும் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாமக்கல், செப். 11: நாமக்கல் மாவட்டத்தில் 8, 10-ஆம் வகுப்பு எழுதும் மாற்றுத் திறனாளி தனித்தோ்வா்களும், சொல்வதை எழுதுவோரும் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் 8, 10, 11, 12-ஆம் வகுப்பு துணைத் தோ்வுகள் மற்றும் தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுகளை எழுதும் மாற்றுத் திறனாளி தோ்வா்கள், சொல்வதை கேட்டு எழுதுபவா்கள், தோ்வுக்கு முன்பாக தங்களுடைய விருப்பத்தின்பேரில் கரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்ளலாம்.

இப்பரிசோதனை செய்து கொள்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளரின், 94899-00303 என்ற செல்லிடப்பேசி எண்ணை வரும் 15-ஆம் தேதிக்குள் தொடா்பு கொள்ளலாம். அவா் மூலம் கரோனா பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

சொல்வதை எழுதுவோரும், சலுகை கோரும் மற்ற மாற்றுத் திறனாளிகளும் தங்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை தோ்வு மையத்துக்குக் கொண்டு வரவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com