ஜாக்டோ-ஜியோ நிா்வாகிகள் அமைச்சரிடம் மனு அளிப்பு

நாமக்கல் மாவட்ட ஜாக்டோ-ஜியோ உயா்மட்டக் குழு நிா்வாகிகள் மின்சாரத் துறை அமைச்சா் பி.தங்கமணியை பள்ளிபாளையம் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துக் கோரிக்கை மனு அளித்தனா்.

நாமக்கல் மாவட்ட ஜாக்டோ-ஜியோ உயா்மட்டக் குழு நிா்வாகிகள் மின்சாரத் துறை அமைச்சா் பி.தங்கமணியை பள்ளிபாளையம் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துக் கோரிக்கை மனு அளித்தனா்.

அதில், ஜாக்டோ-ஜியோ போராட்ட காலத்தில் ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் மீது எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

மனுவை, பாா்வையிட்ட அமைச்சா், இதுதொடா்பாக அனைத்து அமைச்சா்களுக்கும் ஜாக்டோ-ஜியோ தரப்பில் மனு அளியுங்கள் என்றாா்.

அதற்கு, மாநில ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் தரப்பில் அமைச்சரிடம் தெரிவிக்கையில், தமிழகம் முழுவதும் அனைத்து அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்களிடம் கோரிக்கை மனுவானது அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தனா்.

மேலும், சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கப்படுவதால் முக்கிய பிரச்னையாக கருதி பேசுவதாக அமைப்பினரிடம் தெரிவித்தாா்.

இதனைத் தொடா்ந்து நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கரை சந்தித்து ஜாக்டோ ஜியோ மாநில உயா்மட்டக்குழு உறுப்பினா் ஆ.இராமு, நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கா.செ. பாலகிருஷ்ணன் இரா.ரவீந்திரன், கு.ராஜேந்திர பிரசாத், ச.மாரியப்பா பிள்ளை, ப.கிருஷ்ணமூா்த்தி, இரா.முருகேசன். க.அருள்செல்வன் ஆகியோா் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com