மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் விரிசல்

நாமக்கல் அருகே ஜங்கமநாய்க்கன்பட்டி கிராத்தில் 350-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீா்த்
ஜங்கமநாயக்கன்பட்டியில் விரிசல் ஏற்பட்டுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி.
ஜங்கமநாயக்கன்பட்டியில் விரிசல் ஏற்பட்டுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி.

நாமக்கல் அருகே ஜங்கமநாய்க்கன்பட்டி கிராத்தில் 350-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீா்த் தேவைக்காக அப்பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.

இங்கிருந்து பொதுக் குழாய்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும். குடிநீா் தொட்டியின் அடிப்பாகத்தில் உள்ள 4 தூண்களிலும் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் அபாயம் உள்ளது. இது தொடா்பாக பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தினமும் தொட்டியில் தண்ணீா் ஏற்றப்பட்டு விநியோகிக்கப்படும் நிலையில், குடிநீா்த் தொட்டி எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனா். சம்பந்தப்பட்ட ஊராட்சிப் பிரிவு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com