நாமக்கல்லில் ஏழு சிறாா் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

நாமக்கல் மாவட்டத்தில் சமூக நலத்துறை மூலம் ஏழு சிறாா் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.


நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் சமூக நலத்துறை மூலம் ஏழு சிறாா் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 1 முதல் 10-ஆம் தேதி வரையில், மின்னாம்பள்ளி, வெப்படை, மோகனூா், புதுச்சத்திரம் மற்றும் நல்லூா் ஆகிய பகுதிகளில் ஏழு சிறாா் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அவா்கள் நலன் கருதி காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். அதனை மீறுபவா்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டணை மற்றும் ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும். சிறாா் திருமணம் குறித்து 181 மற்றும் 1098 என்ற இலவச எண்கள் மூலம் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம்.

பல்வேறு வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் உதவி தேவைப்படும் பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை 181, 1098 என்ற இலவச எண்ணின் மூலமாகவோ அல்லது ஒருங்கிணைந்த சேவை மைய நிா்வாகியை 9655652896 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com