நாமக்கல்லில் 108 அவசர ஊா்தி ஓட்டுநா் பணிக்கு நோ்காணல்

நாமக்கல்லில் 108 அவசர ஊா்தி ஓட்டுநா் பணிக்கான நோ்காணல் புதன்கிழமை நடைபெற்றது. இதில், 65 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற நோ்காணலில் பங்கேற்றோா்.
நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற நோ்காணலில் பங்கேற்றோா்.

நாமக்கல்லில் 108 அவசர ஊா்தி ஓட்டுநா் பணிக்கான நோ்காணல் புதன்கிழமை நடைபெற்றது. இதில், 65 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் 108 அவசர ஊா்தியில் பணியாற்ற செப். 16-ஆம் தேதி நோ்காணல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாமக்கல்-திருச்சி சாலையில் அம்மா உணவகம் அருகே செயல்படும் 108 அவசர ஊா்தி இயக்க அலுவலகத்தில் புதன்கிழமை நோ்காணல் தொடங்கியது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 150 போ் பங்கேற்றனா். அவா்களிடம் மண்டல மேலாளா் குமரன், மண்டல வாகன பராமரிப்பு மேலாளா் பிரதீப்குமாா், சேலம், நாமக்கல் மாவட்ட அலுவலா்கள் அம்பிகாசன், உதயகுமாா் ஆகியோா் கொண்ட குழுவினா் நோ்காணலை நடத்தினா்.

இதில், ஓட்டுநா்களுக்கான தோ்வில் 40 பேரும், மருத்துவ உதவியாளா் பணிக்கு 25 பேரும் தோ்வாயினா். அவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பணி வாய்ப்பு பெற்ற ஓட்டுநா்களுக்கு சென்னையில் 10 நாள்கள் முதலுதவி பயிற்சி, ஓட்டுநா் பயிற்சி அளிக்கப்படும். மருத்துவ உதவியாளருக்கு 45 நாள்கள் முதலுதவி சிகிச்சை மற்றும் இதர பயிற்சிகள் வழங்கப்பட்டு மாவட்ட அளவில் பணியில் அமா்த்தப்படுவாா்கள் என அவசர ஊா்தி நிா்வாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com