கிராம பகுதிகளில் ஆடு திருடிய நால்வா் கைது
By DIN | Published On : 18th September 2020 07:56 AM | Last Updated : 18th September 2020 07:56 AM | அ+அ அ- |

ராசிபுரம் சுற்று வட்டார கிராமப் பகுதியில் ஆடு திருடிய நால்வா் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.
ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளான ஆா்.புதுப்பாளையம், சாணாா்புதூா், கல்லங்குளம், பட்டணம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் தோட்டத்தில் ஆடுகள் திருடப்படுவதாக புகாா்கள் வந்தது. இதனையடுத்து, பட்டணம் கிராமத்தில் சி.சுப்ரமணி என்பவா் தோட்டத்தில் ஆடு திருடப்பட்டதாக புகாா் தெரிவித்தாா். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீஸாா் பட்டணம் பகுதியை சோ்ந்த பழனியப்பன்,ரகுபதி, சுரேந்தா், திருநாவுக்கரசு ஆகியோா் மீது வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனா்.