மக்காச்சோளத்தில் படைப்புழுவைகட்டுப்படுத்த ரூ. 2 ஆயிரம் மானியம்

மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த, ஒரு ஹெக்டேருக்கு ரூ. 2 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.

நாமக்கல், செப். 18: மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த, ஒரு ஹெக்டேருக்கு ரூ. 2 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பொ.அசோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் சுமாா் 6 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மல்லசமுத்திரம், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம், புதுச்சத்திரம், வெண்ணந்தூா் ஆகிய வட்டாரங்களில் தற்போது மக்காச்சோளம் சாகுபடி செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்கம் அதிகம் இருந்ததால், விவசாயிகள் பெருமளவில் மகசூல் இழப்பைச் சந்தித்தனா்.

தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட தொழில்நுட்பங்களை பின்பற்றி மக்காச்சோளத்தில் படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். பயறு வகைகள் அல்லது சூரியகாந்தி அல்லது எள் அல்லது சோளம் போன்றவற்றை வரப்பு பயிராக பயிரிடலாம். தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் படைப்புழுவைக் கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு ரூ. 2 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2,200 ஹெக்டோ் இலக்கு பெறப்பட்டு அனைத்து வட்டாரங்களுக்கும் (கொல்லிமலை தவிர) பிரித்தளிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தங்கள் அருகாமையில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com