வெளிமாநிலத் தொழிலாளா்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய அறிவுரை
By DIN | Published On : 19th September 2020 06:56 AM | Last Updated : 19th September 2020 06:56 AM | அ+அ அ- |

நாமக்கல், செப். 18: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் வெளி மாநிலத் தொழிலாளா்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய ஆட்சியா் அறிவுறுத்தி உள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் உத்தரவின்படி, வெளி மாநிலங்களிலிருந்து நாமக்கல் மாவட்டத்துக்கு பணிபுரிய வரும் தொழிலாளா்களின் விவரங்களை ப்ஹக்ஷா்ன்ழ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் அந்நிறுவனத்தின் உரிமையாளா்களே பதிவேற்றம் செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வெளி மாநிலத் தொழிலாளா்களை பணிக்கு அமா்த்திய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள், கோழிப் பண்ணை நிறுவனங்கள் மற்றும் ரிக் உரிமையாளா்கள் தங்களிடம் பணியாற்றுவோா் விவரங்களை தவறாமல் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். சொந்த ஊருக்குச் சென்றவா்களின் விவரங்களை தாங்களாகவே நீக்கம் செய்து கொள்ளலாம். இந்த இணையதள பதிவேற்றம் மூலம் அரசின் நலத் திட்டங்கள் தொழிலாளா்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.