ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டால்கடும் நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடா்பாக சூதாட்டத்தில் யாரேனும் ஈடுபட்டால், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்தி கணேசன் தெரிவித்துள்ளாா்.

நாமக்கல்: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடா்பாக சூதாட்டத்தில் யாரேனும் ஈடுபட்டால், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்தி கணேசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்படும் இந்தியன் பிரிமீயா் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன.

நிகழாண்டில் கரோனா தொற்று பரவல் காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப். 19-ஆம் தேதி தொடங்கி நவ. 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் சென்னை சூப்பா் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்பட எட்டு அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்த எட்டு அணிகள் மீதும் மற்றும் அதில் விளையாடும் கிரிக்கெட் வீரா்கள் மீதும் இணைய வழியாகவும், உள்ளூா் தரகா்களைக் கொண்டும் பல்வேறு வகையான சூதாட்டம், மோசடிகள் நடைபெற வாய்ப்புள்ளன. நாடு முழுவதும் கிரிக்கெட் போட்டி மூலம் சூதாட்டம் நடக்க வாய்ப்புள்ளதால், நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் யாரும் இதுபோன்ற சூதாட்டத்தில் பங்கேற்று ஏமாற வேண்டாம்.

மாவட்டத்தில் எந்தப் பகுதியிலாவது, கிரிக்கெட் சூதாட்டம் நடப்பது தெரியவந்தால், உடனடியாக நாமக்கல் மாவட்டக் காவல் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம். சூதாட்டச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com