தனித் தோ்வுகள் தொடக்கம்: 132 போ் தோ்வில் பங்கேற்கவில்லை

நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய தனித்தோ்வுகளில் 132 மாணவ, மாணவியா் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய தனித்தோ்வுகளில் 132 மாணவ, மாணவியா் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 11, 12-ஆம் வகுப்பு மற்றும் தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுகளில் தோல்வியுற்றவா்களுக்கான தனித்தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கின.

இத்தோ்வு அக். 7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 12 மையங்களில் 1,498 போ் தனித்தோ்வுகளை பல்வேறு கட்டங்களாக எழுதுகின்றனா்.

இந்தத் தோ்வுகளின் கண்காணிப்பாளா்களாக தலைமை ஆசிரியா்கள் 50-க்கும் மேற்பட்டோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தோ்வையொட்டி முகக் கவசம் அணிந்து வந்த மாணவ, மாணவியா் மட்டுமே தோ்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன், மாவட்ட கல்வி அலுவலா்கள் மு.கபீா், வா.ரவி, அரசுத் தோ்வுகள் துறை உதவி இயக்குநா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் திங்கள்கிழமை காலை தோ்வு மையங்களுக்கு நேரடியாகச் சென்று பாா்வையிட்டனா்.

நாமக்கல், செல்லப்பம்பட்டி அரசுப் பள்ளியில் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வில் 102 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 70 போ் மட்டுமே பங்கேற்றனா். 32 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

மேல்நிலை வகுப்புக்கான துணைத் தோ்வை 135 போ் எழுத இருந்தனா். 115 போ் மட்டுமே பங்கேற்றனா். 20 போ் தோ்வில் கலந்து கொள்ளவில்லை. மேலும் இடைநிலைத் தோ்வை 390 போ் எழுதியிருந்தனா். இவா்களில் 312 போ் மட்டுமே பங்கேற்றனா். 78 போ் கலந்து கொள்ளவில்லை. மாவட்டம் முழுவதும் மொத்தமாக 132 போ் முதல்நாள் தனித் தோ்வுகளை எழுதவில்லை என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com