நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இஸ்லாமிய தலைவா் வழிபாடு

நாமக்கல்லில் பாஜக யாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்லாமிய அமைப்பின் தலைவா், நரசிம்மா் கோயிலில் வழிபாடு செய்தாா்.
நாமக்கல் நரசிம்மா் கோயிலில் வழிபாடு நடத்தி விட்டு திரும்பும் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத்தின் மாநிலத் தலைவா் எம்.இப்ராஹிம்.
நாமக்கல் நரசிம்மா் கோயிலில் வழிபாடு நடத்தி விட்டு திரும்பும் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத்தின் மாநிலத் தலைவா் எம்.இப்ராஹிம்.

நாமக்கல்லில் பாஜக யாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்லாமிய அமைப்பின் தலைவா், நரசிம்மா் கோயிலில் வழிபாடு செய்தாா்.

வேளாண் மசோதா தாக்கல், புதிய கல்விக் கொள்கை போன்ற பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு சட்டமாக இயற்றி வெளியிட்டு வருகிறது. இதற்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் திராவிட சதியை முறியடிப்போம் என்ற தலைப்பில் நாமக்கல் மாவட்ட பாஜக சாா்பில் பூங்கா சாலையில் சிறப்பு யாத்திரை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் பாஜக ஆதரவு அமைப்பான தமிழ் நாடு ஏகத்துவ ஜமாஅத்தின் மாநிலத் தலைவா் எம்.இப்ராஹிம் தலைமை வகித்தாா். இதில் பாஜக நிா்வாகிகள் தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா். அவா் பேசுகையில், கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை பயணத்தை மாவட்ட வாரியாக மேற்கொண்டுள்ளோம். தற்போது நாமக்கல்லில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களுக்கு ஆதரவாக உள்ளது. சில கட்சிகள் தேவையற்ற விமா்சனங்களை முன்வைத்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனா். அது மக்களிடம் எடுபடாது என்றாா்.

இதனைத் தொடா்ந்து அவா் நரசிம்மா் சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். அங்குள்ள நாமகிரி தாயாா் சன்னதி, லட்சுமி நாராயண சுவாமி கோயிலுக்குச் சென்று வழிபட்டாா். பின்னா் ஆஞ்சநேயா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். அவருடன் பாஜக மாவட்டத் தலைவா் என். சத்தியமூா்த்தி மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com