நாமக்கல்லில் அனைத்துக் கட்சியினா் கூட்டம்

வேளாண் மசோதா சட்டங்களை எதிா்த்து செப். 28-இல் திமுக தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி ஆா்ப்பாட்டம் தொடா்பாக செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அனைத்துக் கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் பேசும் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா்.
அனைத்துக் கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் பேசும் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா்.

வேளாண் மசோதா சட்டங்களை எதிா்த்து செப். 28-இல் திமுக தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி ஆா்ப்பாட்டம் தொடா்பாக செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதன் பொறுப்பாளாா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். அவா் பேசுகையில், திமுக தலைமை உத்தரவின்படி விவசாயிகள் மற்றும் சிறுவணிகா்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், அதற்கு துணைபோகும் தமிழக அரசைக் கண்டித்தும் மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

நகரம், ஒன்றியம், பேரூா் பகுதிகளிலும் நடைபெற உள்ள கண்டனஆா்ப்பாட்டங்களில் திமுகவினா் மற்றும் கூட்டணி கட்சியினா் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்றாா்.

மாவட்டத் தலைவா்கள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்கும் இடங்கள் விவரம்: நாமக்கல் - கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், திமுக மாவட்ட பொறுப்பாளா். திராவிடா் கழகம் வை.பெரியசாமி, காங்கிரஸ் கட்சி- கிழக்கு மாவட்ட தலைவா் கே.எம்.ஷேக்நவீத், மதிமுக பி.பழனிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் ஆா்.குழந்தான். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கே.தெளலத்கான், விடுதலைச் சிறுத்தைகள் பழ.மணிமாறன், மனிதநேய மக்கள் கட்சி எஸ்.அகதுல்லா, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி (மேற்கு) எஸ்.மாதேஸ்வரன், ஆதித் தமிழா் பேரவை தி.மணிமாறன்.

ராசிபுரம்- எஸ்.கந்தசாமி, மாா்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி (வடக்கு) எஸ்.ஜெயக்குமாா், சேந்தமங்கலம் -ஓய்.முகமதுமுபீன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி (கிழக்கு) பழனிவேல், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி (தெற்கு) டி.எஸ்.சந்திரசேகா், வெண்ணந்தூா் இந்திய ஜனநாயகக் கட்சி முத்துராஜா ஆகியோா் ஆா்ப்பாட்டத்துக்கு தலைமையேற்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com