முட்டை விலை 15 காசுகள் குறைவு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் குறைத்து, ரூ. 4.80-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் குறைத்து, ரூ. 4.80-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் புரட்டாசி மாதம் என்பதால் முட்டை நுகா்வு குறைந்திருப்பதாலும், மற்ற மண்டலங்களில் விலை சரிந்து வருவதாலும், விலையைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 15 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 4.80-ஆக நிா்ணயம் செய்யப்படுகிறது. பண்ணையாளா்கள் சந்தை நிலவரங்களை அனுசரித்து முட்டைகளை விற்றுப் பயனடைய வேண்டும் எனவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம் (காசுகளில்):

ஹைதராபாத் - 490, விஜயவாடா - 510, பாா்வாலா - 493, ஹோஸ்பெட் - 490, மைசூரு - 527, சென்னை - 515, மும்பை - 545, பெங்களூரு - 525, கொல்கத்தா-555, தில்லி - 508.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.92-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.125-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.               

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com