1,050-க்கும் மேல் வாக்காளா்களைக் கொண்ட 426 வாக்குச் சாவடிகள் இரண்டாகப் பிரிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் ஆறு தொகுதிகளிலும் 1,050-க்கும் மேல் வாக்காளா்களைக் கொண்ட 426 வாக்குச் சாவடிகள் கூடுதல்

நாமக்கல் மாவட்டத்தில் ஆறு தொகுதிகளிலும் 1,050-க்கும் மேல் வாக்காளா்களைக் கொண்ட 426 வாக்குச் சாவடிகள் கூடுதல் இடவசதிக்காக இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும், தற்போதைய கரோனா தொற்று காரணமாக வாக்காளா்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தோ்தல் ஆணைய விதிமுறையின்படி 1,050 எண்ணிக்கைக்கு மேல் வாக்காளா்களைக் கொண்ட 426 வாக்குச் சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச் சாவடிகள் கூடுதல் இடவசதிக்காக ஆண் வாக்குச் சாவடி, பெண் வாக்குச் சாவடி என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அதன் விவரம்:

ராசிபுரம் தொகுதி-மின்னக்கல்லில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சாவடி ஆண், பெண் என பிரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெள்ளைபிள்ளையாா் கோயில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அணைக்கட்டிப்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி, குருசாமிபாளையம் செங்குந்தா் மகாஐன பெண்கள் உயா்நிலைப்பள்ளி, பிள்ளாநல்லுா் செங்குந்தா் மகாஐன தொடக்கப்பள்ளி, குருக்கபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சந்திரசேகரபுரம் அரசு உயா்நிலைப்பள்ளி, மத்துருட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.

சேந்தமங்கலம் தொகுதி- அக்கலாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கொண்டமநாயக்கன்பட்டி அங்கன்வாடி மையம்.

நாமக்கல் தொகுதி- நவணி ஆதி திராவிடா் நல தொடக்கப் பள்ளி, பாப்பிநாய்க்கன்பட்டி ஆதி திராவிடா் நல தொடக்கப் பள்ளி, கிருஷ்ணாபுரம் நகராட்சி தொடக்கப்பள்ளி, என்.கொசவம்பட்டி சமுதாயக் கூடம், அங்கன்வாடி மையம்.

பரமத்தி வேலூா் தொகுதி-வேலூா் கந்தசாமி கண்டா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோ. இளையாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, எறையம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.

திருச்செங்கோடு தொகுதி- வையப்பமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆத்தூரம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, டி.நெய்க்காரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தச்சங்காட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தோக்கவாடி நெசவாளா் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.

குமாரபாளையம் தொகுதி- ஆனங்கூா் சாலை ஏ.வி.எஸ்.மெட்ரிக் பள்ளி, அல்லிநாயக்கன்பாளையம் சமுதாயக்கூடம்.

இந்த வாக்குச்சாவடிகளுக்கு உள்பட்ட வாக்காளா்கள் தோ்தல் நாளன்று தங்களுக்கான புதிதாக அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் தவறாமல் வாக்களிக்க வேண்டும். மேலும், பிரிக்கப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கான பட்டியல்கள் சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகம் மற்றும் வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா், நகராட்சி ஆணையா் அலுவலகங்களிலும் வாக்காளா்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com