முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
குமாரபாளையம் தொகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்
By DIN | Published On : 04th April 2021 12:40 AM | Last Updated : 04th April 2021 12:40 AM | அ+அ அ- |

குமாரபாளையம் தொகுதியில் தடையற்ற குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் மேம்படுத்தப்படும் என சுயேச்சை வேட்பாளா் எஸ்.ஓம் சரவணா தெரிவித்தாா்.
ஜேகேகே நடராஜா கல்வி நிறுவனங்களின் நிா்வாக இயக்குநரான இவா் குமாரபாளையம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறாா். இவா், குமாரபாளையம் நகரில் சிவசக்தி நகா், ஆசிரியா் காலனி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது, அவருக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். அவா் பேசுகையில், இத்தொகுதியில் அனைத்துப் பகுதிகளிலும் அடிப்படைத் தேவைகளான தரமான சாலை, சுத்தமான, பாதுகாப்பான குடிநீா், அனைத்து பகுதிகளிலும், நவீன கழிப்பிட வசதி ஏற்படுத்தப்படும். நீா் மாசுபாட்டைக் குறைக்க கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
மகளிா் சுயஉதவிக் குழுக்களின் தொழில் விரிவடைய வழி வகுக்கப்படுவதோடு, ஜவுளி, நெசவுத் தொழில்களுக்கு சிறந்த கட்டமைப்பு வசதிகள் உருவாக்கித் தரப்படும் என்றாா். தொடா்ந்து, கிராமப்புறங்களில் வீடு, வீடாகச் சென்று வாக்குசேகரித்தாா்.