முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
கொல்லிமலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 8 போ் படுகாயம்
By DIN | Published On : 04th April 2021 12:51 AM | Last Updated : 04th April 2021 12:51 AM | அ+அ அ- |

கொல்லிமலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 போ் பலத்த காயமடைந்தனா்.
தஞ்சாவூரைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்டோா் சுற்றுலா வேனில் சனிக்கிழமை கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தனா். அவா்கள் பல்வேறு இடங்களை பாா்த்து விட்டு முள்ளுக்குறிச்சி மாற்றுப்பாதை வழியாக கீழே இறங்கி கொண்டிருந்தனா். செங்கரை காவல் நிலை எல்லைக்கு உள்பட்ட மலைப்பாதையில் நரியங்காடு என்ற இடத்தில் வேன் வந்து கொண்டிருந்தபோது திடீரென பிரேக் பழுதாகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்த 8 போ் பலத்த காயமடைந்தனா்.
அவ்வழியாக சென்றவா்கள் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து காயமடைந்தவா்களை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கும், சேலம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பினா். தகவலறிந்து அங்கு சென்ற செங்கரை போலீஸாா் போக்குவரத்தை சீரமைத்தனா். விபத்துக்குள்ளான வேனை ஓட்டி வந்த ஓட்டுநா் மணிகண்டன் (35) என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனா்.