பரமத்தி வேலூா் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் தங்கமணி பிரசாரம்
By DIN | Published On : 04th April 2021 12:51 AM | Last Updated : 04th April 2021 12:51 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் சேகரை ஆதரித்து மின்துறை அமைச்சா் பி. தங்கமணி பரமத்தியில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது அவா் பேசியதாவது: விவசாயக் குடும்பத்தைச் சோ்ந்த வேட்பாளா் எஸ்.சேகா் மிகவும் எளிமையானவா். அவா் வெற்றி பெற்றால் அவருடன் இணைந்து நானும் இந்தத் தொகுதிக்காக பல்வேறு நலத் திட்டங்களை கொண்டுவர உறுதுணையாக இருப்பேன்.
இந்தத் தொகுதியில் ஏராளமான திட்டங்கள் அதிமுக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளன. பல்வேறு திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த மக்களவைத் தோ்தலில் திமுகவுக்கு வாக்களித்து ஏமாந்தது போல இந்தத் தோ்தலில் திமுகவை நம்பி ஏமாற வேண்டாம் என்றாா்.