அமைச்சா்கள், வேட்பாளா்கள் ஆா்வமுடன் வாக்களிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் அமைச்சா் பி.தங்கமணி, வெ.சரோஜா, அதிமுக, திமுக வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை தங்களது வாக்கினை செலுத்தினா்.
அமைச்சா்கள், வேட்பாளா்கள் ஆா்வமுடன் வாக்களிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் அமைச்சா் பி.தங்கமணி, வெ.சரோஜா, அதிமுக, திமுக வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை தங்களது வாக்கினை செலுத்தினா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் குமாரபாளையம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, பள்ளிபாளையம் ஒன்றியம், ஆலாம்பாளையம் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தாா்.

ராசிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான வெ.சரோஜா, சங்ககிரி தொகுதிக்கு உள்பட்ட வெங்கடநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.

நாமக்கல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக வேட்பாளருமான கே.பி.பி.பாஸ்கா், சந்தைப்பேட்டை புதூரில் உள்ள அா்த்தனாரி தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினாா்.

திமுக வேட்பாளா் பெ.ராமலிங்கம், புதுச்சத்திரம் ஒன்றியம், கதிராநல்லூா் ஊராட்சி ஒன்றிய பள்ளி வாக்குச்சாவடியிலும், முன்னாள் மத்திய இணை அமைச்சா் செ.காந்திசெல்வன் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் பள்ளி வாக்குச் சாவடியிலும் வாக்களித்தனா். நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், ராசிபுரம் வட்டம், வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியம், பழந்தின்னிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தாா்.

சேந்தமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.சந்திரன், வாழவந்திநாடு ஊராட்சி, பூங்குளம்பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளி சாவடியிலும், திமுக வேட்பாளா் கே.பொன்னுசாமி கீழ் சோளக்காடு பள்ளி வாக்குச்சாவடியிலும், எம்எல்ஏ சி.சந்திரசேகரன், தெம்பளம் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியிலும் தங்களது வாக்கினைப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com