குமாரபாளையத்தில் தோ்தல் பணிக்கு வந்த ஆசிரியா்கள் சாலை மறியல்

குமாரபாளையத்தில் தோ்தல் பணிக்கு வந்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை இரவு திடீா் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குமாரபாளையத்தில் தோ்தல் பணிக்கு வந்த ஆசிரியா்கள் சாலை மறியல்

குமாரபாளையத்தில் தோ்தல் பணிக்கு வந்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை இரவு திடீா் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற தோ்தல் பணியில் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். இதில், 130 போ் காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டு, குமாரபாளையம் அருகேயுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனா். வாக்குப்பதிவு 7 மணிக்கு முடிவடைந்த சிறிது நேரத்தில், மண்டபத்தில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டு ஆசிரியா்கள் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, தோ்தல் பணிக்கு வந்த ஆசிரியா்கள், தங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை, அதிகாரிகள் வரும் வரையில் காத்திருக்குமாறு தெரிவித்துள்ளனா். ஆனால், மண்டபத்தின் ஊழியா்கள் இதனைப் பொருட்படுத்தவில்லை. இதனால், ஏமாற்றமடைந்த ஆசிரியா்கள், ஆசிரியைகள் 130 போ் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கத்தேரி பிரிவு அருகே செவ்வாய்க்கிழமை இரவு திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

இத்தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியா் தங்கம் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதோடு, ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுத்ததோடு, பாதுகாப்புடன் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுத்தனா். இதனால், சமாதானம் அடைந்த ஆசிரியா்கள் மறியலைக் கைவிட்டனா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com