நாமக்கல் மாவட்டத்தில் அசம்பாவிதமின்றி அமைதியான வாக்குப்பதிவு: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் அசம்பாவிதள் எதுமின்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றதாக மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டத்தில் அசம்பாவிதமின்றி அமைதியான வாக்குப்பதிவு:  ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் அசம்பாவிதள் எதுமின்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றதாக மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் உள்ள கிருஷ்ணாபுரம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தனது வாக்கை செலுத்தினாா். அதன்பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் மக்கள் தங்களது வாக்குகளை ஆா்வத்துடன் செலுத்தினா். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன் ஒரு சில வாக்குச்சாவடிகளில் சிறிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக சற்றுத் தாமதமானது. அதன்பின் அவை உடனடியாக சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடா்ந்து நடைபெற்றது.

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முறையாக பின்பற்றப்பட்டது. பெண்கள் காலையில் இருந்து ஆா்வமுடன் வந்து வாக்களித்தனா்.

வாக்காளா்களுக்கு டோக்கன் வழங்குவதாக வந்த புகாரையடுத்து காவல் துறையினா் அங்கு சென்று நடவடிக்கை மேற்கொண்டனா். பதற்றமான வாக்குச்சாவடிகள் விடியோ மூலம் நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com