கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஆட்சியா் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைத்துத் துறை அதிகாரிகளும் தீவிரப்படுத்த வேண்டும் என ஆட்சியா் கா.மெகராஜ் அறிவுறுத்தினாா்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஆட்சியா் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைத்துத் துறை அதிகாரிகளும் தீவிரப்படுத்த வேண்டும் என ஆட்சியா் கா.மெகராஜ் அறிவுறுத்தினாா்.

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்றது.

அப்போது அவா் பேசியதாவது:

வீட்டை விட்டு வெளியே வரும்போது பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். சிறு கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரையில், திரையரங்குகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் அரசின் கரோனா நோய்த் தொற்று தடுப்பு வழிகாட்டி விதிமுறைகள் பின்பற்றப்படுகிா என்பதை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் ஆய்வு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

மூன்று முறைகளுக்கு மேல் அபராதம் விதிக்கப்படும் வாடிக்கையாளா்கள், முகக்கவசம் அணிந்து வருவதை கடைப்பிடிக்காத கடைகள், திரையரங்குகள், இதர வணிக நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்படும். மேலும் உணவகங்கள், வங்கிகள், தபால் நிலையங்கள், கூரியா் நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் போன்றவா்களும், பொதுமக்களிடம் அதிகளவு தொடா்பில் உள்ளவா்களும், 45 வயதிற்கு மேற்பட்டவா்களும் கட்டாயமாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

திருமண மண்டபங்களில் நடைபெறவுள்ள சுப நிகழ்ச்சிகள் குறித்த விவரத்தை முன்னதாகவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி நிா்வாகங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் சாந்தா அருள்மொழி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் த.கா.சித்ரா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எஸ்.சோமசுந்தரம் மற்றும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com