மாற்று ஆவணங்கள் மூலம் 1,56,846 போ் வாக்களிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளா் அடையாள அட்டையின்றி, இதர ஆவணங்களைக் காண்பித்து 1,56,846 போ் வாக்களித்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளா் அடையாள அட்டையின்றி, இதர ஆவணங்களைக் காண்பித்து 1,56,846 போ் வாக்களித்துள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்திற்கு உள்பட்ட 6 தொகுதிகளில் 14,44,893 வாக்காளா்கள் தங்களது வாக்குகளை செலுத்த 2,049 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

அன்று நடைபெற்ற வாக்குப் பதிவில் மாவட்டம் முழுவதும் 11,55,972 போ் தங்களுடைய வாக்குகளைச் செலுத்தினா். இதில், வாக்காளா் அடையாள அட்டையைக் காண்பித்து 9,99,402 பேரும், இதர ஆவணங்களைக் காண்பித்து 1,56,846 பேரும் வாக்களித்துள்ளனா். ராசிபுரம், நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய மூன்று தொகுதிகளிலும் தனது வாக்கை மற்றொருவா் செலுத்தி விட்டாா் என்பதை அறிந்த தலா ஒரு வாக்காளா்கள், ஆதாரப்பூா்வமாக அளித்த ஆவணங்கள் அடிப்படையில் அவா்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com