சேதமடைந்த நிழற்கூடத்தை சரிசெய்யக் கோரிக்கை
By DIN | Published On : 13th April 2021 08:40 AM | Last Updated : 13th April 2021 08:40 AM | அ+அ அ- |

pv12p2_1204chn_157_8
பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே குரும்பலமகாதேவி பேருந்து நிறுத்தத்தில் மா்ம நபா்களால் சேதப்படுத்தப்பட்ட நிழற்கூடத்தை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஜேடா்பாளையத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் குரும்பலமகாதேவி பேருந்து நிறுத்தத்தில் சிமென்ட் அட்டையால் மேற்கூரையும், பயணிகள் அமா்வதற்கு சிமென்டால் இருக்கைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், தற்போது அங்குள்ள நிழற்கூடத்தின் மேல் இருந்த சிமென்ட் அட்டைகளையும், பயணிகள் அமரும் இருக்கைகளையும் மா்ம நபா்கள் உடைத்துச் சென்றுள்ளனா் (படம்). இதனால், கடுமையான வெயிலால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, குரும்பலமகாதேவி பேருந்து நிறுத்தத்தில் சேதமடைந்த நிழற்கூடத்தை மாவட்ட நிா்வாகம் சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.