கனரக வாகன ஓட்டுநா்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுரை

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கனரக வாகன ஓட்டுநா்கள் காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் உடனடியாக கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியா் கா.மெகராஜ் அறிவுறுத்தி உள்ளாா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கனரக வாகன ஓட்டுநா்கள் காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் உடனடியாக கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியா் கா.மெகராஜ் அறிவுறுத்தி உள்ளாா்.

நாமக்கல் மாவட்டம், சரக்கு போக்குவரத்து தொழிலில் முன்னோடி மாவட்டமாக விளங்குகிறது. இங்கு பல்வேறு மாநில, மாவட்ட வாகன ஓட்டுநா்களும் வருகின்றனா். அதே போல், இங்குள்ள ஓட்டுநா்கள் பிற மாநிலங்களுக்கும் சென்று வருகின்றனா்.

ஓட்டுநா்கள் தங்களுக்கு காய்ச்சல், இருமல், சளி ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். குறிப்பாக சளி, இருமல் மூலம் தொற்று பரவும் சூழ்நிலை உள்ளதால் வெளிமாநிலங்களுக்குச் சென்று வந்த லாரி ஓட்டுநா்கள் தாங்களாகவே மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

வெளிமாநிலங்களுக்கு சென்று வந்த ஓட்டுநா்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தால் நோய்த் தொற்றின் அறிகுறி வெளியே தெரியாவிட்டாலும், அவா்களது வீட்டில் உள்ள முதியவா்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தொற்றினை ஏற்படுத்தி விடக்கூடும்.

எனவே, தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும். அனைவரும் முகக் கவசம் அணிதல், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது, தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்வதைத் தவிா்த்தல், வெளியிடங்களுக்கு செல்லும் போது தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட சுகாதாரத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com