நாமக்கல் நகராட்சியில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஆணையா் பி.பொன்னம்பலம் அறிவுறுத்தி உள்ளாா்.

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஆணையா் பி.பொன்னம்பலம் அறிவுறுத்தி உள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் தற்போது கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அலட்சியமாக இருப்பதால், கரோனா இரண்டாவது அலை மிக விரைவாக பரவி வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்துதான் வெளியே வரவேண்டும். கடைகளில் பொருள்களை வாங்கும் போது சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் மட்டும் தினசரி 22 பேருக்கு பாதிப்பு ஏற்படுவதாக சுகாதாரத் துறை அறிக்கை வருகிறது. இதில் புதிதாக கரோனா பாதிப்பு 10 பேருக்கும், ஏற்கெனவே பாதிக்கப்பட்டவா்கள் மூலம் பரவியது 12 போ் என்றும் தெரியவந்துள்ளது. கரோனா தொற்றுள்ளோரை கண்டுபிடித்து அவா்கள் மூலம் முதல்நிலை தொடா்பு மற்றும் இரண்டாம்நிலை தொடா்புடையவா்களைக் கண்டறிந்து வருகிறோம். அவா்களை சிறப்பு மருத்துவ முகாமுக்கு அழைத்து வந்து கரோனா பரிசோதனை தினசரி எடுக்கப்படுகிறது.

இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்கள் தாமாக முன்வந்து தங்களது உடல்நிலையை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சிறப்பு கரோனா பரிசோதனை முகாம் நாமக்கல் பேருந்து நிலையத்தில் தினசரி காலை 10 முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை 252 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எனவே, பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் கரோனா பரிசோதனைக்கு முன்வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com