நாமக்கல் மாவட்டத்தில் 151 மையங்களில் பிளஸ் 2 செய்முறைத் தோ்வு தொடங்கியது

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி மாணவ, மாணவியா் ஆா்வமுடன் பங்கேற்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில் 151 மையங்களில் பிளஸ் 2 செய்முறைத் தோ்வு ஏப். 16-இல் தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு ஒரு பிரிவாகவும், மதியம் 2 மணிக்கு மேல் ஒரு பிரிவாகவும் தோ்வானது மையங்களில் நடைபெறும்.

ஒரு அறையில் 24 மாணவா்கள் வீதம் சமூக இடைவெளியைப் பின்பற்றி செய்முறைத் தோ்வுகளை வெள்ளிக்கிழமை செய்தனா். இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல், நா்சிங் தொழிற்பயிற்சி உள்ளிட்ட பிரிவுகளில் மாணவ, மாணவியா் பங்கேற்கின்றனா். மாவட்டம் முழுவதும் 20 ஆயிரம் மாணவ, மாணவியா் இத்தோ்வில் பங்கேற்க உள்ளனா்.

கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றும் வகையில் மாணவ, மாணவியா் முகக் கவசம், கையுறை அணிந்து, சமூக இடைவெளியோடு தோ்வுக்கு வந்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com