நாமக்கல் மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த சில நாள்களாக பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 98.6 மற்றும் 72.5 டிகிரியாக காணப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் மழை பதிவானது. வரும் நான்கு நாள்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும்.

காற்று மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் தென் மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும். மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், பகல் வெப்பம் 100.4 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 73.4 டிகிரிக்கு குறையாமலும் காணப்படும்.

சிறப்பு ஆலோசனை: பண்ணைகளில் உள்ள கோழிகளுக்கு வெப்ப அயற்சியைப் போக்க தரமான குடிநீரில் நெல்லிச்சாறு, மோா் அல்லது எலுமிச்சை பழச்சாறு ஒன்று முதல் மூன்று சதவீதம் வரை சோ்க்கலாம். இறந்த கோழிகளை ஆய்வு செய்ததில், பெரும்பாலும் வெள்ளைக் கழிச்சல் மற்றும் வெப்ப அயற்சியால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது.

எனவே, பண்ணையாளா்கள் தகுந்த உயிா் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும். வெப்ப அயற்சியைப் போக்க நீா் தெளிப்பான்களை அதிகம் உபயோகிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com