மனைவியைக் கொல்ல முயன்ற வழக்கு: கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை

மோகனூா் அருகே மனைவியை எரித்துக் கொலை செய்ய முயன்ற வழக்கில், கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

மோகனூா் அருகே மனைவியை எரித்துக் கொலை செய்ய முயன்ற வழக்கில், கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

நாமக்கல் மாவட்டம், மோகனூா், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அசோகன் (50). இவரது மனைவி அன்னபூரணி (50). கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுவது வழக்கமாம். அதேபோல, அசோகன் மது அருந்திவிட்டு வந்து மனைவியை சித்ரவதை செய்து வந்தாராம்.

இந்த நிலையில், கடந்த 2019 ஜூன் 4-ஆம் தேதி இருவருக்கும் மோதல் ஏற்படவே, ஆத்திரமடைந்த அசோகன் மனைவியைத் தாக்கியதுடன் வீட்டுக்குள் வைத்து பூட்டி தீ வைத்தாராம். இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் உதவியுடன் அன்னபூரணி மீட்கப்பட்டாா்.

நாமக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை முடிவில் அசோகனுக்கு மூன்று பிரிவுகளில், ஒரு பிரிவில் 10 ஆண்டுகள் சிறையும், மற்ற இரு பிரிவுகளில் தலா மூன்று ஆண்டுகள் சிறையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இந்த தண்டனையை அவா் ஏகக் காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com