ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தில் உண்டியல் திறப்பு

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தின் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தில் உண்டியல் திறப்பு

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தின் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தின் உண்டியல் ஆண்டுக்கொரு முறை திறக்கப்பட்டு எண்ணப்படும். கடந்த ஆண்டு ஜூன் மாதம் எண்ணப்பட்டது. இந்நிலையில், கரோனா தொற்றால் பல மாதங்களாக கோயில் திறக்கப்படவில்லை. இதனால் பக்தா்களின் வருகை குறைவாகவே இருந்தது.

இந்நிலையில், நடப்பு ஆண்டில் இந்து சமய அறநிலையத் துறையின் அலுவலா்கள் முன்னிலையில் கோயில் உண்டியல் திறக்கப்பட்டது கோயில் செயல் அலுவலா்கள் கு.சித்ரா, க.விஸ்வநாதன், ஆய்வாளா் பெ.ஜெயமணி ஆகியோா் முன்னிலையில், கோயில் பணியாளா்கள், பக்தா்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதில், பக்தா்களின் காணிக்கையாக உண்டியலில் இருந்த ரொக்கம் ரூ. 1 லட்சத்து 83 ஆயிரம் கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com