கரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பு: நாமக்கல் வாரச்சந்தையில் கட்டுப்பாடு

நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்று பரவல் அதிகரிப்பதால், வாரச் சந்தைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பொதுமக்களுக்கு சனிக்கிழமை அனுமதியளிக்கப்பட்டது.
நாமக்கல் வாரச் சந்தையில் உரிய கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்ட பொதுமக்கள்.
நாமக்கல் வாரச் சந்தையில் உரிய கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்ட பொதுமக்கள்.

நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்று பரவல் அதிகரிப்பதால், வாரச் சந்தைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பொதுமக்களுக்கு சனிக்கிழமை அனுமதியளிக்கப்பட்டது.

நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட 39 வாா்டுகளிலும் கரோனா தொற்று பரிசோதனை முகாம் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தினசரி 30 போ் வரை பாதிப்புக்குள்ளாகின்றனா். சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்கள் தாமாக முன்வந்து தங்களது உடல்நிலையை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என ஆணையா் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், ஒவ்வொரு நாளும் 250-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

குறிப்பாக உழவா் சந்தை, வாரச் சந்தைகளில் மக்கள் நெருக்கடியைத் தவிா்க்க நகராட்சி பலவிதக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, நாமக்கல் நகராட்சி அலுவலகம் அருகில் சனிக்கிழமை நடைபெறும் வாரச் சந்தையில் கூட்டத்தை தவிா்ப்பதற்காக நுழைவுவாயில் கதவு மூடப்பட்டது.

வாகனங்களில் வருவோா் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. முகக் கவசம் அணிந்தவா்கள் மட்டுமே சந்தைக்குள் வந்து பொருள்களை வாங்க அனுமதிக்கப்பட்டனா். காலை முதல் இரவு வரையில் நடைபெற்ற இந்த சந்தையில் விதிக்கப்பட்ட கரோனா கட்டுப்பாட்டால் நெரிசல் எதுவுமின்றி மக்கள் வந்து சென்றனா்.

கரோனா பரவிய வீதிகளில் தடுப்புகள் அமைப்பு: நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட வாா்டுகளில் நோய்த் தொற்று பரிசோதனை முகாம்கள் நடத்தியபோதும், வெளிமாவட்டங்களுக்கு சென்று வருவோா் கரோனா பாதிப்புக்குள்ளாகின்றனா்.

அந்த வகையில், ஒரே தெருவில் மூன்று பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருந்தால் அங்கு பிளிச்சீங் பவுடா் தெளிக்கப்படுவதுடன், இரும்புத் தடுப்பு, தகரம் கொண்டு அப்பகுதி மூடப்பட்டு, வெளிநபா்கள் உள்ளே நுழைவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

நோய்த் தொற்றாளா்கள் குணமடையும் வரையில் இந்த தடுப்புகள் பயன்பாட்டில் இருக்கும். அந்த வகையில், நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள விநாயகா் கோயில் தெரு, சிவாஜி தெரு, கொசவம்பட்டி உள்ளிட்ட இடங்களில் தெருக்கள் அடைக்கப்பட்டு அவை நோய்க் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com