கரோனா அச்சமின்றி வாரச் சந்தையில் திரண்ட மக்கள்!

ராசிபுரம் வாரச்சந்தையில் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி பொருள்களை வாங்குவதற்கு செவ்வாய்க்கிழமை திரண்ட மக்களால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ராசிபுரம் வாரச் சந்தையில் செவ்வாய்க்கிழமை திரண்ட மக்கள்.
ராசிபுரம் வாரச் சந்தையில் செவ்வாய்க்கிழமை திரண்ட மக்கள்.

ராசிபுரம் வாரச்சந்தையில் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி பொருள்களை வாங்குவதற்கு செவ்வாய்க்கிழமை திரண்ட மக்களால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தை ஒட்டிய பகுதியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை கூடும்.

கடந்த ஆண்டு கரோனாவின்போது இந்த வாரச் சந்தை மூடப்பட்டது. தற்போது கரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவும் நிலையில் செவ்வாய்க்கிழமை கூடிய ராசிபுரம் வாரச் சந்தையில் ஆயிரக்கணக்கானோா் சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும், முகக் கவசம் அணியாமலும் பொருள்களை வாங்கிச் சென்றனா்.

வாரச்சந்தையின் வெளிப்பகுதியில் கைகளைச் சுத்தம் செய்ய கிருமி நாசினி வைக்கப்படவில்லை. சந்தைப் பகுதியைச் சுற்றிலும் கிருமிநாசினி தூள் தெளிக்கப்படவில்லை. ஏற்கெனவே ராசிபுரம் நகரில் புதிய பேருந்து நிலையம் அருகில் பலருக்கு தொற்று ஏற்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாரச்சந்தையில் திரண்ட கூட்டத்தால், தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

எனவே ராசிபுரம் வாரச்சந்தை கூடும் பகுதியில் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com