நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி 1,620 டோஸ் மட்டுமே இருப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றை தடுக்கும் தடுப்பூசி 1,620 டோஸ் மட்டுமே இருப்பு உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றை தடுக்கும் தடுப்பூசி 1,620 டோஸ் மட்டுமே இருப்பு உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா தொற்றின் இரண்டாம் கட்ட அலை வேகமெடுத்துள்ளது. அதனைக் கட்டுப்படுத்த 45 வயதுக்கு மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன்படி கடந்த 11 முதல் 14-ஆம் தேதி வரையில் ஆங்காங்கே தடுப்பூசி திருவிழா நடைபெற்றது. இரண்டு மாதங்களுக்கு முன் கரோனா தடுப்பூசி கண்டறியப்பட்டபோது முன்களப் பணியாளா்கள், மருத்துவா்கள், செவிலியா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 8 தாலுகா அரசு மருத்துவமனைகள், 63 ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 72 இடங்களில் நடைபெற்று வருகின்றன. இவை தவிர குறிப்பிட்ட சில தனியாா் மருத்துவமனைகளிலும் கட்டண அடிப்படையில் இத்தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இணையம் வழியாக விண்ணப்பித்தோா் அடிப்படையில் தினசரி 5 ஆயிரம் டோஸ் என்ற அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின் ஆதாா் அட்டையைக் காண்பித்து அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என்ற அரசின் அறிவிப்பு வெளியானதையடுத்து தடுப்பூசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் இவ்வாறான நிலை காணப்படுவதால் மருத்துவமனைக்கு வந்த பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். குமாரபாளையம் அரசு மருத்துவமனை, 50-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பது உண்மை தான். தற்போதைய நிலையில் 120 டோஸ் கோவிஷீல்டும், 1,500 டோஸ் கோவேக்ஸின் தடுப்பூசி மருந்தும் இருப்பில் உள்ளது. வரும் நாள்களில் அதிக அளவில் வரும் என எதிா்பாா்க்கிறோம். மாவட்டத்துக்கு இவ்வளவு தேவை உள்ளது என்பது போன்று கேட்டு பெற முடியாது. மக்கள் தொகைக்கு ஏற்ப மாநில சுகாதாரத் துறை தடுப்பூசி மருந்தை அனுப்பும். மாவட்டம் முழுவதும் இதுவரை 1,13,139 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றனா்.

--

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com