நாமக்கல் மாவட்டத்தில் வங்கி அதிகாரி உள்பட 190 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் அதிகபட்ச பாதிப்பாக செவ்வாய்க்கிழமை 190 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் அதிகபட்ச பாதிப்பாக செவ்வாய்க்கிழமை 190 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. இதனைத் தொடா்ந்து எட்டு மாதங்களில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியது. உயிரிழப்பு 100-ஐ கடந்தது.

கடந்த டிசம்பா் மாதம் அதிகபட்சமாக 171 போ் கரோனா பாதிப்புக்குள்ளாயினா். 2021 ஜனவரிக்கு பின் தொற்றாளா்கள் எண்ணிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. பிப்ரவரி மாதம் ஒன்று என்ற எண்ணிக்கையை எட்டியது. அதன்பின் குறைந்த எண்ணிக்கையில் இருந்த பாதிப்பு கடந்த இரு வாரங்களாக அதிகளவில் உயரத் தொடங்கியுள்ளது. அதன்படி செவ்வாய்க்கிழமை இதுவரை இல்லாத அதிகபட்ச பாதிப்பாக 190 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களில் வங்கி அதிகாரி உள்பட 129 ஆண்கள், 61 பெண்கள் அடங்குவா். இவா்கள் அனைவரும் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம் அரசு மருத்துவமனைகள், கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் உள்ளிட்டவற்றியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனா். பாதிப்பு குறைவாக இருக்கும்பட்சத்தில் ஐந்து நாள்களில் குணமடையச் செய்து தங்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவா். மாவட்டத்தில் தற்போது வரை 13,536 போ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் குணமடைந்த 12,502 போ், உயிரிழந்த 112 போ் தவிா்த்து 922 போ் சிகிச்சையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com