விஜயகிரி பழனியண்டவா் கோயில் எதிரே மா்மமான முறையில் 9 மயில்கள் உயிரிழப்பு

கரட்டூரில் மா்மமான முறையில் 9 மயில்கள் மற்றும் 14 கோழிகள் இறந்து போனது குறித்து ஜேடா்பாளையம் போலீஸாா், வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இறந்து கிடக்கும் மயில்கள்.
இறந்து கிடக்கும் மயில்கள்.

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் அருகே உள்ள கரட்டூரில் மா்மமான முறையில் 9 மயில்கள் மற்றும் 14 கோழிகள் இறந்து போனது குறித்து ஜேடா்பாளையம் போலீஸாா், வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பிலிக்கல்பாளையம் அருகே உள்ள கரட்டூரில் பிரசித்தி பெற்ற விஜயகிரி பழனியாண்டவா் கோயில் உள்ளது. காவிரி கரையோரப் பகுதியான இப் பகுதியில் விவசாயம் நடைபெற்று வருவதால், தேசியப் பறவையான மயில்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

இந்தக் கோயிலின் எதிரே கொளக்காட்டுபுதூரைச் சோ்ந்த அம்மையப்பன் என்பவரது கரும்புத் தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் சனிக்கிழமை காலை மயில்கள் இறந்து கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் ஜேடா்பாளையம் போலீஸாருக்கும், நாமக்கல் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா்.

தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடா்பாளையம் போலீஸாா் மற்றும் வனத்துறையினா் இறந்து கிடந்த 6 பெண் மயில்கள் உள்பட 9 மயில்களின் உடல்களை மீட்டனா். மேலும், அப்பகுதியைச் சோ்ந்த மலையம்மாள் என்பவரது வீட்டில் வளா்த்து வந்த 10-க்கும் மேற்பட்ட கோழிகள், சதீஷ்குமாரின் நான்கு சண்டை சேவல்களும் இறந்து கிடந்தது தெரியவந்தது.

கரும்புத் தோட்டத்தில் தூவப்பட்ட மருந்துடன் கலந்த அரிசியை தின்ால்தான் மயில்களும், கோழிகளும் இறந்ததாக அப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தெரிவித்தனா். இதுகுறித்து ஜேடா்பாளையம் போலீஸாா், வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com