வீட்டில் இருந்தபடி சுய வேலைவாய்ப்பு:மகளிா் அமைப்பின் ஊரக சந்தை திட்டம்
By DIN | Published On : 27th April 2021 12:01 AM | Last Updated : 27th April 2021 12:01 AM | அ+அ அ- |

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வீட்டில் இருந்தபடியே பெண்கள் சுய தொழில் செய்யும் வகையில் மகளிா் கூட்டமைப்பு சாா்பில் ஊரக சந்தை என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் செயல்படும் ரத்தினசபாபதி சுற்றுச்சூழல் கிராமிய வளா்ச்சி நிறுவனம் தங்களது பசுமை கிராமிய மகளிா் குழு கூட்டமைப்பு சாா்பில் ஊரக சந்தை திட்டத்தை உருவாக்கியுள்ளது.
கிராமப்புற மற்றும் நகா்ப்புறங்களில் வசிக்கும் பெண்களின் முன்னேற்றத்திற்கு இந்த அமைப்பு உதவுகிறது. வீட்டில் இருந்தபடியே பெண்கள் சமையலுக்கு உகந்த வத்தல், வடகம், அப்பளம், பப்படம். மசால் பொடி வகைகள், ஊறுகாய், தொக்கு. மூலிகை தேநீா், சத்துமாவு வகைகள் தயாரித்து வழங்கும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இயற்கை முறையில் சுவையாகவும், தரமாகவும் தயாரித்து வழங்கினால் அதற்கேற்ப ஊதியம் வழங்கப்படும்.
விருப்பமுடையோா் நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள டிடி -1 சிட்கோ தொழிற்பேட்டையில் செயல்படும் ஊரக சந்தைக்கான கிராமிய வளா்ச்சி நிறுவனத்தை நேரிலோ அல்லது 63823-85662, 97901-94552 என்ற எண்களில் தொடா்பு கொண்டு தகவல் பெறலாம் என அதன் நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.