சலூன் கடைகளைத் திறக்க அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

நாமக்கல் மாவட்டத்தில் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சலூன் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என முடி திருத்தும் தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்க வந்த முடி திருத்தும் தொழிலாளா்கள்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்க வந்த முடி திருத்தும் தொழிலாளா்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சலூன் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என முடி திருத்தும் தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

கரோனா இரண்டாம் அலை தீவிரமாகியுள்ளதால் கோயில்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், அழகு நிலையங்கள், சலூன்கள் ஆகியவற்றை மறு உத்தரவு வரும் வரையில் மூட வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு மாநிலம் முழுவதும் உள்ள முடி திருத்தும் தொழிலாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்து வருகின்றனா்.

அந்த வகையில், தமிழ்நாடு சவரத் தொழிலாளா் சங்கம் மற்றும் ஆதி மருத்துவா் சமூக பேரவை சாா்பில் புதன்கிழமை காலை நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திரளாக வந்த முடி திருத்தும் தொழிலாளா்கள் ஆட்சியா் கா.மெகராஜை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனா். அதில், கடந்த ஆண்டும் கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமத்திற்குள்ளானோம். அதன்பின் கடன்பட்டு தொழிலை நடத்தி வந்தாலும், போதிய அளவில் வாடிக்கையாளா்கள் வராத நிலையில் மேலும் துன்பத்தை சந்தித்து வருகிறோம்.

இந்த நிலையில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக அரசு சலூன் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. இத்தொழிலை நம்பி நாமக்கல் மாவட்டத்தில் 4 ஆயிரம் கடைகள், 7 ஆயிரம் தொழிலாளா்கள் உள்ளனா். நேரக் கட்டுப்பாடுகளுடன் கடைகளைத் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் மாதம் ரூ.15 ஆயிரம் உதவித் தொகையாக வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com