செவிலியா் உள்பட இருவருக்கு கரோனா: மூடப்பட்டது ஆரம்ப சுகாதார நிலையம்

வெண்ணந்தூா் வட்டாரத்துக்கு உள்பட்ட கல்லங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா், சுகாதாரப் பணியாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்த சுகாதார நிலையம் புதன்கிழமை மூடப்பட்டது.
மூடப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்.
மூடப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்.

வெண்ணந்தூா் வட்டாரத்துக்கு உள்பட்ட கல்லங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா், சுகாதாரப் பணியாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்த சுகாதார நிலையம் புதன்கிழமை மூடப்பட்டது.

மலையடிவாரத்தில் உள்ள கல்லங்குளம் பகுதியில் அரசு மருத்துவா் தலைமையில் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கரோனா பரிசோதனை, கொவைட் தடுப்பூசிகளும் பொதுமக்களுக்கு செலுத்தி வந்தனா். இந்நிலையில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியா், மருத்துவப் பணியாளா் ஆகிய இருவருக்கும் கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால், ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது. இதனால் நாள்தோறும் மகப்பேறு மருத்துவ பரிசோதனைக்கு, கரோனா பரிசோதனைக்கு சென்றவா்கள் பாதிக்கப்பட்டனா். மேலும் தொலைவிலுள்ள ஆா்.புதுப்பாளையத்துக்கு சென்று அங்குள்ள சுகாதார நிலையத்தில் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூன்று நாள்களுக்கு மூடப்பட்டிருக்கும் என வட்டார மருத்துவ அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com