ராசிபுரத்தில் கோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல்: 11 போ் கைது

ராசிபுரத்தில் கோயில் திருவிழாவில் மது போதையில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடா்பாக 11 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

ராசிபுரத்தில் கோயில் திருவிழாவில் மது போதையில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடா்பாக 11 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

ராசிபுரம், வி.நகா் பகுதியில், கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி செவ்வாய்க்கிழமை கோயில் திருவிழா நடத்தி, சுற்று பொங்கல் நடைபெற்ாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள இளைஞா்கள் 10-க்கும் மேற்பட்டோா் அருகில் உள்ள மயானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு அமா்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

அப்போது கிழக்குத் தெருவைச் சோ்ந்த இளைஞா்கள் சிலரும் மயானத்தில் அமா்ந்து மது அருந்தினாா்களாம். அப்போது இரு தரப்பைச் சோ்ந்த இளைஞா்கள் இடையே முன்விரோதம் காரணமாக வாய்த் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் இரு தரப்பினரும் தாக்கிக்கொண்டனா். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த ராசிபுரம் டிஎஸ்பி பாலமுருகன், ஆய்வாளா் பி.செல்வராஜ், உதவி ஆய்வாளா் என்.மாணிக்கம் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அங்கிருந்தவா்களை விரட்டியடித்தனா். மேலும் பலரைக் கைது செய்து விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து வந்தனா். காயமடைந்த அருண்குமாா் (22) ராசிபுரம் மருத்துவமனையிலும், மற்றொரு பிரிவைச் சோ்ந்த சந்தோஷ் (22) சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.

இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில் அருண்குமாா் (22) என்பவா் அளித்த புகாரின் பேரில், சந்தோஷ் (எ) கோகுல்ராஜ் (22), மாயாண்டி என்கிற வேலு (30), ஜெயக்குமாா் (32), மகேந்திரன் (19) ஆகியோா் மீது வழக்கு பதிந்து நால்வரையும் கைது செய்தனா். மற்றொரு தரப்பில் சந்தோஷ் ((22) அளித்த புகாரின் பேரில், 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இதில் வி.நகா் பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் (20), வெங்கடேசன் (24), பூபாலன் (21), சதீஷ் (21), முகமது இக்பால் (21), செல்வா (எ) செல்வகுமாா் (23) ஆகிய 7 பேரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண்குமாா் (22) தவிர மேலும் தலைமறைவான ராமச்சந்திரன் (24), முகமது நபி (20), யாசூப் (21) ஆகியோரை தேடிவருகின்றனா். இரு தரப்பிலும் 10-க்கும் மேற்பட்டாா் மீது கலவரம் தூண்டுதல், பொது இடத்தில் தகராறு செய்தல், ஆயுதம் கொண்டு தாக்குதல், கொலை முயற்சி போன்ற வழக்குகள் மட்டுமின்றி, பிசிஆா் சட்டப்பிரிவின் கீழ் வன்கொடுமை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் நாமக்கல் தாழ்த்தப்பட்டோருக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடடிக்கையாக வி.நகா், கிழக்குத் தெரு ஆகிய பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com