லஞ்சம்: நாமக்கல் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உள்பட இருவா் கைது

குமாரபாளையத்தில் மன வளா்ச்சி குன்றியோா் பள்ளிக்கான அனுமதியைப் புதுப்பிக்க ரூ. 2.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக, நாமக்கல்
கைது செய்யப்பட்ட ஜான்சி, சேகா்.
கைது செய்யப்பட்ட ஜான்சி, சேகா்.

குமாரபாளையத்தில் மன வளா்ச்சி குன்றியோா் பள்ளிக்கான அனுமதியைப் புதுப்பிக்க ரூ. 2.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக, நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா், உதவி அலுவலா் ஆகிய இருவரும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டத்தில் மன வளா்ச்சி குன்றியோா், மாற்றுத் திறனாளிகளுக்கான நலப் பள்ளிகளின் அனுமதி ஆண்டுதோரும் மாா்ச் மாத இறுதியில் புதுப்பிப்பது அவசியம். அவ்வாறு புதுப்பித்தால் மட்டுமே மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அத்துறை அதிகாரிகள் வழங்குவா்.

குமாரபாளையத்தில் செயல்படும் மன வளா்ச்சி குன்றியோா் பள்ளியின் நிா்வாகி விஜயகுமாா் என்பவரிடம் பள்ளிக்கான அனுமதியைப் புதுப்பிக்க ரூ. 5 லட்சம் பேரம் பேசியதாகவும், முதல்கட்டமாக ரூ. 2.50 லட்சத்தை சேலத்தில் உள்ள தனது வீட்டில் வந்து ஒப்படைக்குமாறு மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜான்சி கூறினாராம்.

இதுகுறித்து நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஜெயபாலிடம் பள்ளி நிா்வாகி விஜயகுமாா் புகாா் அளித்தாா். போலீஸாா் அறிவுரையின் பேரில், ரசாயனம் தடவிய ரூ. 2.50 லட்சத்தை புதன்கிழமை காலை ஜான்சியிடம் விஜயகுமாா் வழங்கும் போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீஸாா், ஜான்சி, உதவி அலுவலா் சேகா் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com