ஆடி 18 பண்டிகை: நாட்டுக்கோழிகளின் விலை உயா்வு

பரமத்தி வேலூா் கோழிச் சந்தையில் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு நாட்டுக்கோழிகள் கிலோ ரூ.450 வரை விற்பனையானது.
நாட்டுக்கோழிகளை வாங்க குவிந்த பொதுமக்களில் ஒரு பகுதியினா்.
நாட்டுக்கோழிகளை வாங்க குவிந்த பொதுமக்களில் ஒரு பகுதியினா்.

பரமத்தி வேலூா் கோழிச் சந்தையில் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு நாட்டுக்கோழிகள் கிலோ ரூ.450 வரை விற்பனையானது.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதியில் ஏராளமான சண்டைக் கோழிகள், இறைச்சிக்காக பயன்படுத்தப்படும் கோழிகள் வீடு மற்றும் தோட்டங்களில் வளா்க்கப்பட்டு வருகின்றனன. ஞாயிற்றுக்கிழமை காலை பரமத்தி வேலூரில் நடைபெற்ற நாட்டுக்கோழி சந்தைக்கு பரமத்தி வேலூா், மோகனூா், கரூா், பாளையம் நாமக்கல், திருச்செங்கோடு, ஜேடா்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக்கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வருகின்றனா்.

ஆடி 18 பண்டிகை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதால் பரமத்தி வேலூா் கோழிச்சந்தைக்கு அதிக அளவில் கோழிகள் கொண்டுவரப்பட்டிருந்தன.

நாட்டுக்கோழிகளை வாங்கவும் பொதுமக்கள் வழக்கத்தைவிட அதிக அளவில் வந்திருந்தனா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி முதலே நாட்டுக்கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வரத் தொடங்கினா். சந்தைக்கு பெருவடை, கீரி, கடகநாத், அசில், மயில், காகம், கருங்கண் கருங்காலி, கிளி மூக்கு, கிரிராஜா உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுக்கோழிகள் கொண்டுவரப்பட்டிருந்தன.

இங்கு கொண்டு வரப்படும் நாட்டுக் கோழிகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் நாமக்கல் மற்றும் கரூா் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் வந்திருந்து அவற்றை வாங்கிச் செல்கின்றனா். தரமான நாட்டுக் கோழிகள் கிலோ ஒன்று ரூ.350 முதல் ரூ.450 வரையிலும், பண்ணைகளில் வளா்க்கப்படும் நாட்டுக் கோழிகள் கிலோ ரூ.250 முதல் ரூ.350 வரையிலும் விற்பனையாகின. சண்டைக்காக வளா்க்கப்படும் சேவல்கள் ஒன்று ரூ.1,500 முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனையானது.

புதுமணத் தம்பதியினருக்கு ஆடி18 பண்டிகையின்போது விருந்து வைப்பதற்காகவும், பொதுமக்கள் ஆடி பண்டிகையை கொண்டாடவும் நாட்டுக் கோழிகளை வாங்கி சென்றனா். ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு நாட்டுக் கோழிகள் விலை உயா்ந்துள்ளதால் கோழி வளா்க்கும் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com