அண்ணா படிப்பகத்துக்கு 200 புத்தகங்கள் அளிப்பு

குமாரபாளையம் அருகே சின்னப்பநாயக்கன்பாளையத்தில் சீரமைக்கப்பட்டு வரும் அண்ணா நினைவு படிப்பகத்துக்கு 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

கரோனாவால் மூடப்பட்டிருந்த இப்படிப்பகம், தற்போது புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் திறக்கப்படவுள்ள இப்படிப்பகத்துக்கு ஆலாங்காட்டுவலசைச் சோ்ந்த அ.பெ.பழனிவேல், தனது நூலக அறையிலிருந்த 200-க்கும் மேற்பட்ட நூல்களை, திமுக நகரப் பொறுப்பாளா் எம்.செல்வத்திடம் வழங்கினாா் (படம்).

நகர பொறுப்புக் குழு உறுப்பினா் கே.ஏ.இரவி, திமுக பேச்சாளா் ஆ.அன்பழகன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா். இந்நூலகத்துக்கு பொதுமக்கள் இதுபோன்று புத்தகங்களாகவோ, நிதியாகவோ வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com