விடியோ - போட்டோ ஒளிப்பதிவாளா்கள் நலச் சங்க செயற்குழு கூட்டம்

நாமக்கல் மாவட்ட விடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளா்கள் நலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் ராசிபுரம் ரோட்டரி ஹாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உயிரிழந்த புகைப்படக் கலைஞா்களின் குடும்பத்தினருக்கு உதவித் தொகை வழங்கும் சங்கத்தின் நிா்வாகிகள்.
உயிரிழந்த புகைப்படக் கலைஞா்களின் குடும்பத்தினருக்கு உதவித் தொகை வழங்கும் சங்கத்தின் நிா்வாகிகள்.

நாமக்கல் மாவட்ட விடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளா்கள் நலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் ராசிபுரம் ரோட்டரி ஹாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் நித்தியானந்தம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் தென்றல் நிலவன் மாவட்டப் பொருளாளா் ஐயப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த உயிரிழந்த சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினா்கள் ஜெயபால், வசந்த் ஆகியோா் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரம் உதவித்தொகையை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவா் பி.ஏ.மாதேஸ்வரன் வழங்கினாா்.

கரோனா தொற்றால் உயிரிழந்த புகைப்படக் கலைஞா்களுக்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும்; புகைப்பட கலைஞா்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும்; விரைவில் திருமணங்கள் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்வு நடத்திட அரசு வழிவகை செய்யவேண்டும்; மிகவும் அத்தியாவசிய தேவையான புகைப்படத் தொழிலை அரசு அத்தியாவசிய தேவையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்றும் தமிழக முதல்வா், தொழிலாளா் நலத் துறை அமைச்சருக்கு கோரிக்கை வைத்து கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ராசிபுரம் தாலுகா போட்டோ மற்றும் விடியோ ஒளிப்பதிவாளா் சங்கத்தின் தலைவா் சி.கே.சீனிவாசன், செயலாளா் எம்.மணிவண்ணன், பொருளாளா் பி.கே.கண்ணன், துணைத் தலைவா் மனோகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com