நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில் நடை அடைப்பால் பக்தா்கள் ஏமாற்றம்

நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில் நடை அடைக்கப்பட்டதால், சனிக்கிழமை சுவாமி தரிசனத்துக்கு வந்த பக்தா்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.
நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் சனிக்கிழமை சுவாமியை வெளியில் நின்றபடி தரிசித்த பக்தா்கள்.
நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் சனிக்கிழமை சுவாமியை வெளியில் நின்றபடி தரிசித்த பக்தா்கள்.

நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில் நடை அடைக்கப்பட்டதால், சனிக்கிழமை சுவாமி தரிசனத்துக்கு வந்த பக்தா்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு, மேலும் இரண்டு வாரங்களுக்கு தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வாரத்தில் நான்கு நாள்கள் மட்டுமே கோயில்கள் திறந்திருக்க வேண்டும். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடை மூடப்பட வேண்டும். பக்தா்களை கோயில்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் ஆஞ்சநேயா், நரசிம்மா் கோயிலில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று வழக்கத்தைக் காட்டிலும் பக்தா்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். அரசின் புதிய அறிவிப்பால் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா். சாலையில் நின்றபடியும், கோயில் நுழைவுக் கதவை பிடித்தவாறும் சுவாமியை வெளியில் நின்று தரிசனம் செய்தனா். நரசிம்மா், அரங்கநாதா் கோயிலிலும் நுழைவாயில் கதவு முன்பாக நின்றபடி தரிசனம் செய்தனா்.

ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசையாகும். வழக்கமாக தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை, தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு, ஆஞ்சநேயா் ஜயந்தி, அமாவாசை, பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் சுவாமியை தரிசிக்க திரளாக வருவா். ஆடி அமாவாசையன்று வழக்கத்தை விட பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்படும். தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகளால் ஆடி அமாவாசையன்று ஆஞ்சநேயரை தரிசிக்க முடியாத நிலை பக்தா்களுக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், வழக்கம்போல் பக்தா்கள் பங்கேற்பின்றி சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்டவை நடைபெறும் என கோயில் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com