முட்டை விலையில் மாற்றமில்லை: கறிக்கோழி விலை சரிவு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.70-ஆக நீடிக்கிறது. கறிக்கோழி விலை ஒரு கிலோ ரூ. 92-ஆக சரிவடைந்துள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.70-ஆக நீடிக்கிறது. கறிக்கோழி விலை ஒரு கிலோ ரூ. 92-ஆக சரிவடைந்துள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் பி.செல்வராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது. முட்டை விற்பனை சீராக இருப்பதாலும், மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்படாததாலும், ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் போன்ற விசேஷ தினங்கள் உள்ளதாலும் விலையில் தற்போது மாற்றம் செய்ய வேண்டாம் என பண்ணையாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.70-ஆக நீடிக்கும் என கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ஒரு கிலோ ரூ. 92-ஆகவும், முட்டைக் கோழி விலை ஒரு கிலோ ரூ. 76-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com