‘வாகன வரியை உயா்த்தும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்’

தமிழகத்தில் வாகன வரியை உயா்த்த மேற்கொள்ளும் முயற்சியை, மாநில அரசு கைவிட வேண்டும் என நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
‘வாகன வரியை உயா்த்தும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்’

தமிழகத்தில் வாகன வரியை உயா்த்த மேற்கொள்ளும் முயற்சியை, மாநில அரசு கைவிட வேண்டும் என நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழக அரசின் நிதித் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் திங்கள்கிழமை வெள்ளை அறிக்கையை வெளியிட்டாா். அதில், தற்போதைய அரசின் நிதிநிலை, கடன் சுமை ஆகியவை எந்த வகையில் உள்ளன என்பது குறித்தும், எந்தெந்த துறைகள் மோசமான கட்டத்தில் உள்ளன, 15 ஆண்டுகளாக வாகனங்களுக்கு வரி உயா்த்தப்படாதது, உள்ளாட்சிகளில் சொத்து வரிகள் மாற்றியமைக்கப்படாதது போன்றவை குறித்து அமைச்சா் விளக்கம் அளித்திருந்தாா்.

இந்த நிலையில், நாமக்கல்லில் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் ஆா்.வாங்கிலி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் ஆண்டுக்கு பல்வேறு பணிகள் வாயிலாக ரூ. 5,674 கோடி வருவாய் கிடைக்கிறது. மேலும், மாநில எல்லைகளில் உள்ள 21 சுங்கச் சாவடிகள் மூலம் ரூ. 328 கோடி கிடைக்கிறது. மொத்தமாக ரூ. 6,002 கோடி வரை கிடைக்கிறது. இந்த மொத்த வருவாயில் போக்குவரத்துத் துறைக்கு ஆகும் செலவு ரூ. 344 கோடி மட்டுமே. இது சுமாா் 6 சதவீதம் தான்.

தமிழகத்தில் ஏற்கெனவே வாகன வரி அதிக அளவில் இருப்பதால், லாரி உரிமையாளா்கள் அண்டை மாநிலங்களுக்குச் சென்று தங்களது வாகனங்களைப் பதிவு செய்கின்றனா். எனவே, வாகன வரியை மேலும் உயா்த்தும் முயற்சியை மாநில அரசு கைவிட வேண்டும். டீசல் விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து வேலைநிறுத்தம் மேற்கொள்வது தொடா்பாக தென் மண்டல லாரி உரிமையாளா்கள் சங்கக் கூட்டம் விரைவில் நடத்தப்பட்டு உரிய முடிவு எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com